×

பு.புளியம்பட்டியில் 5 மணி நேரத்தில் கால்நடை சந்தையில் ரூ.1.50 கோடி வியாபாரம்

*விவசாயிகள் ஆர்வம்

சத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டி சந்தையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சந்தை துவங்கிய 5 மணி நேரத்தில் ரூ.1.50 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு 40 எருமைகள், 250 கலப்பின மாடுகள், 100 கன்றுகள், 300 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

எருமைகள் ரூ.36 ஆயிரம் ரூபாய் வரை, ஜெர்சி மாடு 52 ஆயிரம், சிந்து மாடு 48 ஆயிரம், நாட்டு மாடு 72 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. வளர்ப்பு கன்றுகள் 15 ஆயிரம் வரை விற்பனையானது. இதேபோல 400க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கர்நாடக, கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச்சென்றனர். சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் சந்தை துவங்கிய 5 மணி நேரத்தில் ரூ.1.50 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தைவிட இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும், விலையும் 3,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், பரவலாக மழை பெய்துள்ளதால் கறவை மாடுகளை விவசாயிகள் வாங்கி சென்றதாகவும், அனைத்து கால்நடைகளும் ரூ.1.50 கோடி ரூபாய்க்கு விற்பனையானது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பு.புளியம்பட்டியில் 5 மணி நேரத்தில் கால்நடை சந்தையில் ரூ.1.50 கோடி வியாபாரம் appeared first on Dinakaran.

Tags : B. Puliyampatti ,Sathyamangalam ,Punchai Puliambatti ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை